இரயில்வேயில் இனி புதிய பணியிடங்களுக்கு வாய்ப்பில்லை..

நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவு தவிர்த்து இரயில்வேயின் புதிய பணியிடம் உருவாக்கத்தை நிறுத்த இந்திய ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை மறு ஆய்வு செய்யவும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவைத் தவிர்த்து மற்ற அனைத்து பிரிவுகளிலும் காலி பணியிடங்களில் இருந்து 50 சதவீதத்தை திரும்ப பெறவும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

அனைத்து இரயில்வே கோட்டமும் இந்த அறிவிப்பை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு காரணமாக இரயில்வேயின் நிதித் துறை இயக்குனரகம் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே 3 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக கடந்த வருடம் இரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த காலி பணியிடங்கள் தற்காலிகமாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் 3 லட்சம் பணியிடங்களில் பாதுகாப்பு பிரிவு தவிர்த்து மற்ற பணியிடங்களில் 50 சதவீதத்தை திரும்ப பெறவும் கூறியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் vரயில்வே பணிகளுக்காக காத்து இருக்கக்கூடிய இளைஞர்கள் பெருமளவில் பாதிப்பு அடைய கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ரயில்வேயில் 300-க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெறுகிறார்கள் அவர்களின் பணியை தற்பொழுது இருக்கக்கூடிய இரயில்வே ஊழியர்கள் கூடுதலாக செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

தற்போது வந்துள்ள அறிவிப்பு இரயில்வே ஊழியர் களுக்கும் இரயில்வே பணிகளுக்காக காத்து இருக்கக் கூடிய இளைஞர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது…

Recent Posts