முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30-ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 64 பேர் உயிரிழப்பு; இதுவரை உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,829-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. இன்று மட்டும் 1205 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,969-ஆக அதிகரித்துள்ளது

இன்று 4,163 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் . தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324-ஆக அதிகரித்துள்ளது