காரோனா பெருந் தொற்று காலத்தில் காவல்துறையுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியமையைப் பாராட்டி 2021 இந்திய குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கரோனா பெரும் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வல அமைப்புகள் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் களுக்கு காரைக்குடி கோட்ட காவல்துறை சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு அருண் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கரோனா காலத்தில் பல தன்னார்வல அமைப்புகள் ஒன்றிணைந்து ஊற்றுகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் பணியைச் செய்து வந்தனர்.
அதனுடன் கரோனா பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும டீ மற்றும் உணவுகள் வழங்கி வந்தனர் .
முதலில் காரைக்குடி நகரில் 100 பேருக்கு உதவி வந்த இந்த அமைப்பு படிப்படியாக புதுவயல், கோட்டையூர், குன்றக்குடி, பிள்ளையார் பட்டி வரை உதவிக்கரம் நீட்டிவந்தனர். சுமார் 500 பேர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு கொடுத்தனர். அந்தந்த பகுதிகளில் சமையல் கூடம் அமைத்து தன்னார்வ இளைஞர்கள் தொண்டாற்றிவந்தனர்.
இது போல் கரோனா தொற்றில் சுழன்று பணியாற்றிய இஸ்மாயில் மருத்துவர் குமரேசன், அரசு சோமன் உள்பட செவிலியர்கள்,முன்கள பணியாளர்கள். கரோனா காலத்தில் மக்களின் தேவைகளை அறிய அயராத பணியாற்றிய பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஊடக பத்திரிக்கையாளர்கள் நாகேந்திரன்,விக்கி, சுந்தர், சதாசிவம், ,சாய் தர்மராஜ், ஜெய் கணேஷ்,சேக் அப்துல்லா போன்றோர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்