2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.24 முதல் மனுக்களை வழங்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பிப். 24 முதல் அடுத்த 5-ம் தேதி வரை மனுக்களை வழங்கலாம் என கூறியுள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தரலாம் என கூறியுள்ளது.