காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் ஏ.சி. முத்தையா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஏ.சி முத்தையா முதன்மை சுகாதார நல மையங்கள் சார்பில் மாவட்டசுற்றுப்புற கிராமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை ,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 1700 பயனாளிகளுக்கு சுமார் 17,00,000( பதினேழு லட்சம்) மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரானா நிவாரணப் பொருட்களை ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையேற்று தொடங்கி.வைத்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் காரைக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பி.அருண் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஏ.சி .எம் அறக்கட்டளை இயக்குனர் கே.எல்.பாலாஜி, ஏ.சி.எம் மருத்துவ அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி கி.மகாதேவன், வ.சூரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏஆர். முருகப்பன், காரைக்குடி ஏ.சி.எம்.மருத்துவ அறக்கட்டளை மருத்துவ அலுவலர் டாக்டர்.எம்.பெரியசாமி ஆகியோர் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
காரைக்குடி ஏ.சி.எம் மருத்துவ அறக்கட்டளை திட்ட வளர்ச்சி அலுவலர் டாக்டர்.போ.வில்வலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
வ.சூரக்குடியில் நடைபெற்ற விழா மற்றும் நிகழ்ச்சி நிரலை மூன் ஸ்டார் லேனா சிறப்பாக ஒருங்கிணைத்து நிவராணப் பொருட்ளை வழங்க ஏற்பாடு செய்தார்.
மாலை மாத்துாரில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி தலைமையில் கொரானா நிவாரணப் பொருட்கள் ஏ.சி.எம். மருத்துவ அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்