பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்தபோது சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசாக பல வசதிகளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது சசிகலா,இளவரசி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று சசிகலா,இளவரசி இருவரும் நேரில் ஆஜராகினர்.

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா,இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

5 மாநில தேர்தல் முடிவுகள் உ.பி உள்ளிட்ட 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி..

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..

Recent Posts