அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்: ஓ பன்னீர்செல்வம் பேச்சு…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,

2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார்