அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 5ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.