முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் குறித்து உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்தோம். யாருடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதித்தோம். 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார். தோழமை கட்சிகளுடனும் விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக கூறினார். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் விவாதித்தோம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், விபி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்பு நிர்வாகிகள் ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர்.

Alliance in parliament election will be announce soon: Stalin