முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் 3 முக்கிய பதவிகளில் இந்தியர்கள் ..

அமெரிக்காவில் நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 அமெரிக்க இந்தியர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார்.

அமெரிக்க அணு ஆற்றல் துறையின் உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய்

மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் பட்டேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களின் நியமனம் பற்றிய தகவல் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இதுவரை முக்கிய பதவிகளில் 24க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்களை அதிபர் டிரம்ப் நியமித்தது குறிப்பிடத்தக்கது.