அமமுக முதல் வேட்பாளர் பட்டியல் : திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே.உமாதேவன் போட்டி..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். 15 பேர் கொண்ட பட்டியலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் முதன்மை செயலாளர் கே.கே. உமாதேவன் போட்டியிடுகிறார். அதபோல் பழனியப்பன் பாப்பிரெட்டி பட்டியிலும் முன்னாள் எம்.பி அன்பழகள் ராசிபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் பட்டியல்

  1. ராசிபுரம் (தனி) – S.அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமமுக துணைத் தலைவர்.
  2. பாப்பிரெட்டிப்பட்டி – P.பழனியப்பன், முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர்.
  3. பாபநாசம் – M.ரெங்கசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.
  4. சைதாப்பேட்டை – G.செந்தமிழன் முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்.
  5. ஸ்ரீரங்கம் – R.மனோகரன் முன்னாள் அரசு கொறடா, பொருளாளர், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்.
  6. மடத்துக்குளம் – C.சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், அமமுக தலைமை நிலையச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர்
  7. திருப்பத்தூர் (சிவகங்கை) – K.K. உமாதேவன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர்.
  8. சோளிங்கர் – N.G. பார்த்திபன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தேர்தல் பிரிவுச் செயலாளர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்.
  9. வீரபாண்டி – வீரபாண்டி S.K. செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்.
  10. உசிலம்பட்டி – I.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்
  11. கோவை தெற்கு – R.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை, முன்னாள் சட்டப்பேரவஒ உறுப்பினர், அமைப்புச் செயலாளர், கோவை மேற்கு மாவட்டச் செயலாளர்

12 அரூர் – அரூர் R.R.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், ஆட்சிமன்ற குழுத் தலைவர்.

13 பொள்ளாச்சி – K.சுகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்.

14 தருமபுரி – D.K.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்.

15 புவனகிரி – K.S.K.பாலமுருகன், அமைப்புச் செயலாளர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்.

இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.