அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள கலைஞர் சிலை : நேரில் பார்வையிட்டார் ஸ்டாலின்..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழுவுருவச் சிலை நிறுவப்படவுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள த கலைஞர் கருணாநிதியின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.