ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கைது: மும்பை போலீஸ் அதிரடி …

அர்னாப் கோஸ்வாமி

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018-ம் ஆண்டு அர்னாப் தற்கொலைக்குத் தூண்டியதாக ஏற்கெனவே அவர் மீது புகார் இருந்தது.

அவரது இல்லத்திலிருந்து அலிபாக் போலீஸார் அர்னாபை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் போலீஸ் வேனில் தன்னைப் பிடித்துத் தள்ளியதாக புகார் எழுந்துள்ளது, மேலும் தன் வீட்டில் தன்னை கைது செய்யும் முன் தன்னைபோலீஸார் தாக்கியதாகவும் அர்னாப் கேள்வி எழுப்பினார்.

2018-ம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளரும் அவரது தாயாரும் தற்கொலை செய்துக் கொண்டனர், இது தொடர்பாக ஏற்கெனவே புகார் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தற்கொலை செய்து கொண்ட அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கோஸ்வாமியின் சேனலிலிருந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது குறித்து அலிபாக் போலீஸ் விசாரணை செய்யவில்லை என்று அதன்யா நாயக் புகார் தெரிவித்ததாக தேஷ்முக் தெரிவித்தார். மேலும் அதனால்தான் தன் தந்தையும் பாட்டியும் தற்கொலை செய்து கொண்டதாக மகள் அதன்யா நாயக் புகார் எழுப்பியதாக தேஷ்முக் தெரிவித்தார்.

சுஷாந்த் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி சிறப்பு முனைப்புக் காட்டி மகாராஷ்டிரா ஆளும் சிவசேனாவுக்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பு காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்குக்காக முறைகேடாக நடந்த விவகாரம் வேறு அர்னாப் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதாக மத்திய அமைச்சர் இந்தக் கைதைக் கண்டித்துள்ளார்