ஆசிய விளையாட்டு போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டர் ஒட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தியாவின் சார்பில் ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 3நிமிடம் 44.72 வினாடிகளில் இலக்கை அடைந்தார்.

மகளிர்க்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில், ஹீமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை கொண்ட இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பி.யு.சித்ரா வெண்கல பதக்கம் வென்றார்.

வட்டு எறிதலில் வெண்கலம்

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமாபுனியா வெண்கலம் வென்றார்.

ஆண்கள் ஹாக்கியில் தோல்வி

ஆண்கள் ஹாக்கி போட்டியில் மலேசியா இந்தியா அணிகள் மோதின.போட்டியின் இறுதி வரையில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. போட்டி பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்ற நிலையில் மலேசிய அணி 7-6 என்ற கோல்கணக்கில் இந்திய அணியை வென்றது.

பதக்க பட்டியலில் 8-ம் இடம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 14 தங்கம் 20 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களுடன் 8-ம் இடத்தில் உள்ளது.