அட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை..

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.

லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சிறிய ரக விமானம் மூலம் ஸ்காட்லாந்து பகுதியிலிருந்து கிளம்பிய அவர், சுமார் 3000 கி.மீ பயணத்திற்கு பின்னர் கனடாவில் தனது பயணத்தை நிறைவுசெய்தார்.

பலவித வானியல் சூழல்களுக்கு மத்தியில் விமானத்தில் பயணித்த அவர், லாவகமாக செயல்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

ஆரோகியின் இந்த சாதனையை தொடர்ந்து பலதரப்பிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.