வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்குத் தொடங்கி மாலை 4மணிக்கு நிறைவடைந்தது.

முந்நூறு தொகுதிகளில் மொத்தம் நாற்பதாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காவல்துறை, இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த 6இலட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்ததாக வங்கதேச நாளிதழான டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்முறையில் 64பேர் காயமடைந்ததாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.