வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை மையம்..

தென்மேற்கு வங்கக் கடலில்உருவான காற்றழுத்தப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறியதன் காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது..

மேலும் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு புயலாக மாறவுள்ளதால் மீனவர்கள் வங்க கடலில் மீன் படிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.