முக்கிய செய்திகள்

பிக்பாஸ்-2 வாக்குக்குள் புகுந்த கருப்பு ஆடு : பார்வையாளர்கள் கொந்தளிப்பு..

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்,இதன் 2வது பிக்காஸ் நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இந்த போட்டியில் இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டியவர்களுக்கு பார்வையாளர்கள் அளித்த வாக்கிற்குள் கருப்பு ஆடு புகுந்துள்ளதாக பார்வையார்கள் கொந்தளிக்கின்றனர்.

காரணம் இந்த வாரம் சென்ட்ராயன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இங்குதான் பிரச்சனை உள்ளதாக வாக்களித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிற்கு கிடைத்த வாக்கிற்குள் கருப்பு ஆடு புகுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சென்ட்ராயனுக்கு அதிகமாக வாக்கு வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மாறியது எப்படி என்கின்றனர்.