பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு…

குஜராத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்புவிழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் சென்றார். பதவியேற்பு விழா முடிந்த நிலையில் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்.உடன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் இருந்தார்.
அதிமுகவின் பொதுக்கு வழக்கு நடைபெற்று வரும் பரபரப்பான சூழலில் ஒ.பி.எஸ் சந்திப்பு தமிழக அரசியலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்