குஜராத் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்பு..

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி அளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அப்போது, குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் முதல்வராக பதவி ஏற்றார். ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து, ஷர்ஷ் சங்கவி, ஜகதீஷ் விஸ்வகர்மா, நரேஷ் படேல், பச்சுபாய் கபாத், பர்ஷோத்தம் சோலங்கி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.