முக்கிய செய்திகள்

கரு..கரு.. கூந்தலுக்கு வெள்ளை கரிசலாங்கண்ணி..

பெண்ணில் தொடங்கி ஆண் வரை அனைவரையும் மனம் கலங்கவைப்பது தலைமுடிதான். பெண்கள் நீளமான கூந்தலை விரும்புவார்கள்,ஆண்கள் வழுக்கையில்லாமல் வாழ நினைப்பார்கள்.

இப்படி மனிதர்களின் வாழ்வில் தலைமுடியும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

தற்போது எல்லாம் 18 வயதிலே ஆண்,பெண்,இருபாலருக்கும் தலை முடி நரைத்து விடுகிறது. 40 வயதை தொடர்வர்களுக்கு சொல்லவே தேவையில்லை..

நரையை மறைக்க பலரும் பலவிதமான இரசாயன கலைவகளைக் கொண்டு தலையில் பூசி தங்கள் இளமையை பேணுகிறார்கள்,

ஆனால் இவர்கள் இதற்கு பலவிதமான உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடுகிறது.
இவற்றிலிருந்து நிரந்தரமாக நரைமுடி இல்லாமல் இருக்க வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை போதும்!!!

கரிசலாங்கண்ணி கீரை இதில் மஞ்சள், சிவப்பு என இருவகை உண்டு. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து கொள்ளவும். இந்த கீரையை எடுத்து கையில் நசுக்கி பார்த்தாலே அந்த இடத்தில் கருப்பாக இருக்கும். அப்பொழுதே தெரிந்து கொள்ளலாம். இது கரிசலாங்கண்ணி கீரை என்று.

இப்பொழுது அந்த கீரையின் சாரை சம அளவு எடுத்து அதில் தேங்காய்எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தேய்த்து வர முடி கருப்பாக மாறும். நரை முடி வராது மேலும் முடி உதிர்வு நின்றுவிடும்.

இந்த கரிசலாங்கண்ணியை சாப்பிடுவதால் மிகவும் நல்லது. இதை கீரையாக செய்து சாப்பிடலாம். ரத்தசிகப்பணுக்கள் எண்ணிக்கையும் ரத்தவெள்ளையணுக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ரத்தசோகையை குறைக்கும். இதை சிறு உருண்டையாக உருட்டி பாலில் அல்லது மோரில் கலந்து சாப்பிடலாம்.

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும்.

இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும்.

சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும்.

மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்