இரத்த விருத்திக்கு..

முருங்கை இலை

இரத்த சோகை உலகை பிடித்த பீடையாகவே உள்ளது. இந்தியாவில் 80 சதவிகித பெண்குழந்தைகள் போதிய சத்தான உணவின்றி இரத்த சோகையால் பாதிப்படைந்து உள்ளனர். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையைப் போக்க இயற்கை முறையில் எளிய குறிப்புகள்

  1. இரத்தம் நன்கு உற்பத்தியாக ஒரு டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
    2.பேரீச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இரத்தம் ஊறும்.
    3.நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும்.
  2. சக்கரவர்த்தி கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும்.
  3. முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
  4. வல்லாரை இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து அதை தேன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி,இரத்தம் விருத்தியாகும்.
  5. பீட்ரூடை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பருகினால புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
  6. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
  7. வெந்தயம், பச்சரிசி சேர்த்து சமைத்து உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
  8. காசினிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
  9. காரட், காலிப்ளவர் ஆகியவற்றை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
    நன்றி
    நாட்டு மருந்து முகநுால்