சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவாகும் இது.

இதில் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தல் ஆணையத் தரவுகளின்படி 31,80,014 வாக்காளர்கள் உள்ளனர்.

18 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் 8 மணிக்குத் தொடங்கியுள்ளது.

சில வாக்குச் சாவடிகளில் வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ரமன்சிங் தொகுதியிலேயே வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாண்டேவாடா, பிஜப்பூர் அல்லது சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளதோடு, அனைவரையும் காலி செய்யுமாறு மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்ப்பரேட்கள் ஆதரிக்கும் அரசுக்கு சாதகமாக வாக்களிக்காதீர்கள் என்று போலீஸ் நிலையம் அருகிலேயே பெரிதாகத் தெரியுமாறு மாமரத்தில் போஸ்டரை வைத்துள்ளனர்.

இந்நிலையில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

சுமார் 1 லட்சம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர்