சென்னையில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக நாளை துறவரமேற்கின்றனர்….

சென்னையில் நாளை ஒரே நேரத்தில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக துறவரமேற்கின்றனர். இந்து, கிறிஸ்துவத்தைப் போல் ஜெயின் மதத்திலும் பல பெண் துறவிகள் உள்ளனர்.

ஜெயின் மதத்தில் குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள் என அனைத்து வயதினரும் துறவியாக மாறலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாதவரத்தில் உள்ள ஜெயின் கோயிலில் ஒரே நேரத்தில் 21 பெண்கள் ஜெயின் மத துறவிகளாக மாறுகின்றனர்.

பொன், பொருள் பற்று நீங்கி லெளதீக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவதற்காக துறவறம் பூண்டுகின்றனர்.

இதற்காக இன்று மாதவரத்தில் வண்ணமயமான ஊர்வலம் விழா நடைபெற்றது. இந்த பெண்களோடு அவர்களது பெற்றோர்களும் ஊர்வலமாக சென்றனர்.

இது குறித்து ஜெயின் துறவற பெண்கள் கூறுகையில்,’ஜெயின் படிப்பு படித்த பிறகு தான் வாழ்க்கையைப் பற்றி புரிந்தது.

மகாவீரர் என்ன சொல்லுகிறார் என்பதை புரிந்து கொண்டால் தான் வாழ்க்கை என்றால் என்ன, மோட்சம் என்றால் என்ன, அதை எப்படி அடைவது என்பது தெரியவரும்.

இனி எல்லாமே எங்களது குருக்கள் தான். வீட்டு விசேஷங்களில் இனி கலந்து கொள்ள மாட்டோம். இவையணைத்தும் எங்களது பெற்றோர்களின் அனுமதியோடு தான் துறவறம் எடுத்துள்ளோம்.’

இவ்வாறு தெரிவித்தனர்.