அந்தமான் அருகே உருவான புயலுக்கு ‘கஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டது..

நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்தமான் கடல்பகுதியில் உருவெடுக்கவுள்ள புயலுக்கு கஜா என தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது.

அந்தமான் அருகே “கஜா” புயல் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வரும் 14ஆம் தேதி இரவில் இந்தப் புயல் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் எனவும்

இதனால் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையோ கனமழையோ பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

தெற்கு கேரளா, குமரி, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.