சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை வந்தார்.
அதனை தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உரையாடுகிறார். முன்னதாக சுலபமாக இல்லாமல் கடினமாக இருக்கும் வகையில் கேள்விகளை கேளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழைக்கவும் என ராகுல்காந்தி மாணவிகளிடம் கூறினார். ஹாய் ராகுல் என ஒரு கல்லூரி மாணவி கூறியதும் அரங்கத்தில் ஒரே சிரிப்பலை எழுந்தது.