செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா :வெகு விமர்சையாக கொண்டாட்டம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தினவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-20 ஆம் தேதி பிரெஞ்சு நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு மொழி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அப்போது முதல் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது.
கலை,இசை,நடனம்,உடை,உணவு வகைகள்,சினிமா மற்றும் சுற்றுலா ஆகியவற் றிற்கான கதவைத் திறக்கும் கலாச்சாரத்தின் மொழி பிரெஞ்சு மொழி. பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்வது மாணவர்களின் உயர் படிப்புக்கு ஊதவும். பிரெஞ்சு மொழி பேசுவது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பல்வேறு செயல்பாடுகள் மூலம் பிரெஞ்சு மொழி கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை ஆராய்ந்து அறிந்து கெள்வதற்காக இந்நாளை பிரெஞ்சு துறை ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம். கவிதை வாசித்தல்,பாடல் பாடுதல்,பிரெஞ்சு பிரபலங்கள் பற்றிய காணொளிக் காட்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நிகழ்தப்பட்டது. மேலும் சில சுவையான பிரெஞ்சு உணவுகளையும் தயார் செய்தார்கள்.


பிரெஞ்சு பிரதிதிகளான சூன்மார்டெல்,டேவிட் மற்றும் எஸ்டேல் ஆகியோர் பிரான்சில்-லிருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் தாங்கள் வாழ்த்தகளை தெரிவித்துள்ளனர். அவர்களின் வாழ்த்து செய்தி இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக அமைந்தது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்