இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

சீனாவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் ஆபாச மற்றும் சட்டவிரோத வெளியீடுகளுக்கு எதிரான தேசிய அமைப்பு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த மே மாதம் தொடங்கி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கருத்துகள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பின் அடுத்த கட்டமாக தற்போது 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன

China Shuts 4,000 websites