முக்கிய செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை; தமிழகம் ழுழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..


கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தமிழகம் ழுழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 25ஆம் நாளான இன்று, ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்

இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாட்டுத் தொழுவத்தில் ஏசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு முதலே தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் அனைத்து தேவாலயங்களிலும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.