கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர்.

இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது என்றும்,
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்பட்டிருந்தால் அந்த தொகை வாடிக்கையாளர்களுக்கு திரும்பி அளிக்கப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புtழங்கியுள்ளது.