கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ..

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்திருக்கிறது. இந்தியா முழுவதுமே நாளொன்றுக்கு மிகக்குறைந்த பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனிடையே சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியது.
அங்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த ஆலோசனையில் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் கரோனா குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பினர், தற்போது ஒமிக்ரான் தொற்று முழுமையாக குறையவில்லை என்றும் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து அரசுகள் முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக பல கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்த சூழலில், தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? விமான நிலையத்தில் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளலாம்? ஏற்கனவே ஒன்றிய அரசு கொடுத்துள்ள வழிமுறைகள் சரியாக இருக்கின்றதா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்து அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.