இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது…

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர், 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக பாதி்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்து 23 ஆயிரத்து 77 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 718 ஆகவும் அதிகரித்துள்ளது. 4,749 பேர் கரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்.

ஆனால், இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்)அறிக்கையில் இதுவரை 23 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 77 பேர் வெளிநாட்டினர். வியாழக்கிழமை மாலைவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மகராஷ்டிராவில் 14 ேபர், குஜராத்தில் 9 பேர், உத்தரப்பிரதேசத்தில் 3 பேர், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகத்தில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் குஜராத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு பலி 112 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை83 ஆக உயர்ந்துள்ளது.