கரோனா தடுப்பூசி மருந்து : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார்

கரோனா முதல் தடுப்பூசியை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டுக்கொண்டார். தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட பின் அவர்
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.என்றார்.