டெல்லியில் புதிய தமிழ் கல்வி பள்ளி : காணொளி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் தமிழ் கல்வி கழகத்திற்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.