“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படும்”: மதுரை இரயில்வே அதிகாரி மாங்குடி எம்.எல்.ஏ-யிடம் உறுதி…

“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்”.
மதுரை இரயில்வே அதிகாரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடியிடம் உறுதியளித்துள்ளார்.

அது பற்றி மதுரை கோட்ட இரயில்வே துறை மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறுகையில்: “இந்திய அரசு இரயில்வேதுறையின் விதிகளின்படி, இரயில்வே கேட் அருகிலேயே NH சாலையின் மேம்பாலம் அமைத்து விட்டதால், நிரந்தரமாக இரயில்வே கேட்டை எடுத்துவிடுவதுதான்சட்டமாகும். இது இந்தியா முழுவதும் பொருந்தும். எனவே, நீங்கள் மாநில அரசின் மூலமாக, அருகில் (SUBWAY) தரையின் கீழ் சுரங்கத் துணைப் பாதை அமைக்க ஏற்பாடு செய்யலாம். இதற்கு இரயில்வே துறையின் பங்களிப்புக்கு அனுமதியை பெற்றுத்தர வாய்ப்பு உள்ளது. அதுவரை உங்களால் கூறிய கோரிக்கையின் அடிப்படையில், தற்காலிகமாக இரயில்வே கேட் மூடாமல் இருக்க உறுதி தருகின்றோம்”. என தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மற்றும் DRUCC உறுப்பினர் சிவகங்கை M.R. சையது, தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் S. கண்ணப்பன், இணைச் செயலாளர் VR. இராமநாதன் (மோகன்),.ECRPF-KKDI& KCRPWA யின் ஒருங்கிணைப்பாளர் S.R.M.பாலசுப்பிரமணியன், தேவகோட்டை வர்த்தகச் சங்கத் தலைவர் S. மகபூப்பாட்சா, துணைத்தலைவர் P. செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் S. மஸ்தான் அலி, நகை வணிகர் சங்கச் செயலாளர் R.சரவணன், காரைக்குடி நகர் காங்.தலைவர் பாண்டி மெய்யப்பன் செயலாளர் KT.குமரேசன், மா.செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி கூறும்போது: “தமிழக அரசு முதலமைச்சருக்கும், தொடர்புள்ள அமைச்சர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு விரைவாக செயல்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்படும்”. என்று தெரிவித்தார்.


பொதுமக்களின் வசதிக்காகவும் வாகனங்கள் கேட் மூடியிருக்கும் நிலையில் வரிசையில் நின்று நெரிசலை தவிர்பபதற்காகவும்தான் ரயில்வே கேட் அருகே பாலங்களை அமைக்கிறார்கள். பாலங்கள் பொது போக்குவரத்திற்கு திறந்த விட்ட பிறகும் இரயில்வே கேட்கள் வழியாக பயணிப்பது தேவையற்ற ஒன்றுதானே. பல கோடிகள் செலவில் அமைக்கப்படும் மேம்பாலங்களை மக்கள் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து மீண்டும் இரயில்வே கேட் வழியே பயணம் செய்வோம் என்பது உகந்ததன்று.
செய்தி & படங்கள்
சிங்தேவ்