சேரனின் “திருமணம்”.. விஜய் சேதுபதியின் அறிவிப்பு..

இயக்குனர் சேரனின் புதிய படத்திற்கு திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு சேரன் படம் இயக்கவில்லை.

இப்போது  தம்பிராமையாவின் மகனை வைத்து திருமணம் சில திருத்தங்களுடன் என ஒரு புதிய திரைப்படம் இயக்க உள்ளார்.

அதற்கு பேர் சூட்டும் விழாவிற்கு விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக வந்தார் படத்தின் பெயரை அறிவித்தார்.

இந்த படத்தில் நடிகை சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா உள்ளிட்டோருடன் சேரனும் நடித்துள்ளார்.

காவ்யா சுரேஷ் என்ற பெண் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.இந்த திரைபடம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறை அன்று திரைக்கு வரும் என சேரன் அறிவித்துள்ளார்.