இயக்குனர் ரவி முருகையாவின் “ஆயிரம் பொற்காசுகள் ”

ஆயிரம் பொற்காசுகள் இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், அருந்ததி நாயர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் இசையமைத்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் பொருளை வைத்து சமைத்து வீட்டிற்குள்ளே ஒரு சோம்பேறியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சரவணன்.
அவரிடம் வந்து சேர்கிறார் சரவணனின் தங்கை மகனான விதார்த். சரவணின் வீட்டிற்கு அருகே பாத்ரூம் கட்டுவதற்கு முயற்சி எடுக்கிறார்.

பாத் ரூம் கட்ட, குழியை தோண்டுவதற்காக ஜார்ஜும் இன்னொருவரும் வருகின்றனர். இதில், ஜார்ஜ் குழி தோண்டும் போது, அந்த குழியில் சுமார் 1000 பொற்காசுகள் கையில் சிக்குகிறது.

இதை யாருக்கும் தெரியாமல் எடுக்க முற்படும்போது சரவணனும் விதார்த்தும் பார்த்து விடுகின்றனர்.

கிடைத்த பொற்காசுகளை மூன்று பங்குகளாக பிரிக்க பார்க்கின்றனர்.
இறுதியில் இந்த பொற்காசுகள் யாரின் கைவசம் சென்றது.? அதை கைப்பற்றுவதற்காக யார் யார் என்ன செய்தார்கள்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

எதை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பவர் நடிகர் விதார்த். இதிலும், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். இவருடன் சரவணனும் பொருத்தமாக தனது கேரக்டரை அளவோடு செய்துமுடித்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலமே கதை மற்றும் திரைக்கதை தான். எந்த இடத்திலும் படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்காமல் சின்ன சின்ன இடத்திலும் காமெடி காட்சிகளை சிதறவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நடிகர் ஹலோ கந்தசாமி கிடைக்கிற இடத்திலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். போலீஸாக வருபவர், மன நலம் பாதித்தவராக வருபவர், பாம்பு பிடிப்பவராக வருபவர், தங்க ஆசாரியாக வருபவர் என படத்தில் வரும் கேரக்டர்கள் அனைவரையும் சரியாக பயன்பத்தியிருக்கிறார் இயக்குனர்.

முழுக்க முழுக்க காமெடி கலந்த நல்லதொரு ஜனரஞ்சகமான படத்தை ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

சாதாரண ஒரு கதையை கையில் எடுத்து அதை அழகான திரைக்கதையால் அதற்கு உயிர் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாகவே உள்ளது.

ஆயிரம் பொற்காசுகள் சிரிப்புக்கு பஞ்சமில்லை