முக்கிய செய்திகள்

திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

காவிரி ஆற்றில் மேகதாது அருகே துடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சம் அனுமதி வழங்கி உள்ளது.

இதனை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் திமுக நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திறகு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.