இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி..

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட்அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
ஏற்கனவே 4ஆவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து 5ஆவது டெஸ்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் மட்டும் இங்கிலாந்து வென்ற நிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.