முக்கிய செய்திகள்

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..


தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார்.

அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் குமுதம் இதழில் நீண்ட காலம் பணியாற்றி் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.