முக்கிய செய்திகள்

பாபா ராம் தேவ் எதிர்காலத்தில் இந்திய பிரதமராக வாய்ப்பு: நியூயார்க் டைம்ஸ்..


பிரபல ஆன்மிக யோகா குருபாபா ராம்தேவை, அமெரிக்க அதிபர் டிரம்ப்-வுடன் ஒப்பிட்டு பிரபல ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர்யோகா குரு பாபா ராம்தேவை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் டிரம்ப்-வுடன் ஒப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் பாபா ராம்தேவுக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

யோகா குருவாக இருக்கும் பாபா ராம் தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து செல்படுவது போலவே, அதிபர் டிரம்ப் அவரது தொழில் நிறுவனங்களை கவனித்துக்கொண்டுஅரசியலில் ஈடுபடுகிறார்.யோகாவை வைத்து பிரபலமான பாபா ராம்தேவ்-க்கு,. இந்தியாவை ஆளும் பாஜகவின் பின்புலம் இருக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு, பாபா ராம்தேவ் பரப்புரை காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி டிரம்ப் சர்ச்சைகளின் நாயகான இருந்து வெற்றி பெற்றாரோ அதுபோல பாபா ராம்தேவ் தனது பரப்புரையால்இந்திய அரசியலில் பாஜகவை வெற்றி பெறச்செய்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண்கள் விஷயத்தில் பல சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.பாபா ராம்தேவ்,எந்த நாட்டு பிரதமரை விடவும் அதிக அதிகாரம் பெற்றவர் என்றும்அவரது அதிரடி பரப்புரையால் எதிர்காலத்தில் பாபா ராம்தேவ்பிரதமர் ஆகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.