அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

அழகோவியம் இன்னொரு மோனலிசா

உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக் கலைஞருமான பிரெடரிக் லெய்டனால் தீட்டப்பட்டது.

இளவேனிற்காலத்தில் அழகிய இளம்பெண் ஒருவர், ஒருவித இனம்புரியாத மயக்கத்தில் உறங்குவது போன்ற ஓவியம். அந்தப் பேரழகியின் உடலைத் தழுவியுள்ள மெல்லிய மஞ்சள் நிற உடையில் ததும்பும் எழில் பற்றிய வர்ணனைகள் காலமெல்லாம் தொடர்கின்றன.

காலம் 1895. ஆனால் 1960 ஆம் ஆண்டில்தான் மக்களின் பார்வைக்குக் கிடைத்தது. இந்த அரிய ஓவியத்தை முதலில் ப்யூர்டோ ரிகோ நகரில் உள்ள Arte de Ponce என்ற கலைக்கூடம்தான் விலைக்கு வாங்கியது. அந்தப் படைப்பு உருவாக்கப்பட்ட கென்சிங்டன் லெய்டன் மியூசியத்திற்கே தற்போது வந்துவிட்டது.

நினைவிழந்த நிலை, ஆழ்ந்த உறக்கம், மரணம் அல்லது மயக்கம், தொந்தரவற்ற உறங்கும் அழகு, உடல்ரீதியாக இங்கே மனரீதியாக தொலைவில்,
கனவில் தொலைதல் என கவித்துவமாக விவரிக்கிறார்கள் கலை விமர்சகர்கள்.
நன்றி
சுந்தரபுத்தன் முகநுால் பதிவு