டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்

முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலஜி  இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் செந்தில் பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி, கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் திமுகவில் உறுப்பினராக இணைவதற்கான படிவத்திலும் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார்.