முக்கிய செய்திகள்

கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த “கஜா“ புயல் மொத்தமாக மரங்களையும் மின் கம்பங்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த பேரிடரால் பெரிதும் உயிர் சேதத்தை தடுத்த தமிழக அரசை எந்த வகையிலும் பாரட்டலாம்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து போர்கால அடிப்படையில் செயல்பட்டதால் தான் மிக அதிகமான உயிரிழப்பை தவிர்த்துள்ளனர்.

பேரிடரை பேரிழப்பாக இல்லாமல் செய்த தமிழக அரசுக்கு நன்றி. மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில் செயல்பட்ட தமிழக அமைச்சர்கள்,

அரசு உயர் அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு குழுவினர் ,ஊழியர்கள் என அனைவரின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுகள்.

அமெரிக்கா போன்ற நாடுகள் புயலைக் கண்டு திணறும் போது தமிழக அரசின் செயல்பாடு பாரட்டத்தக்கது.

மலேசியாவிலிருந்து

N T SENTHILKUMARAN