கஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது நாளை(நவ.,15) மாலை அல்லது இரவு, கடலூர் பாம்பன் கடற்கரை இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மேலும் புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ.,லிருந்து 13 கி.மீ.,ஆக அதிகரித்துள்ளது.

மிக கனமழை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல ஊர்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ., மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக, 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.