கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது – இந்திய வானிலை மையம்

அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது – வானிலை மையம்.

சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது – வானிலை மையம்

நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது – வானிலை மையம்

நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் – வானிலை மையம்

நாளை மறுநாள் முற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிற்பகல் கரையை கடக்கும் என்று தகவல் – வானிலை மையம்

24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி பின்னர் வலுகுறைந்து புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் – வானிலை மையம்

புயல் கரையை கடக்கும் போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பாதிப்புகள் ஏற்படும் – வானிலை மையம்

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் – வானிலை மையம்

புயல் கரையை கடக்கும் போது கடற்கரையோர குடிசைகள் சேதம் அடையும் – வானிலை மையம்

புயல் கரையை கடப்பதால் கடற்கரையோர சாலைகளுக்கு சேதம் ஏற்படும் – வானிலை மையம்

மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளும் பாதிக்கப்படும் என்று வானிலை மையம் எச்சரிக்கை