ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாளை இந்தியா வருகை..

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், 3 நாள் பயணமாக நாளை (அக்.,31) இந்தியா வர உள்ளார். அவருடன் 12 மந்திரிகளும் இந்தியா வர உள்ளனர்.

ஏஞ்சலா மெர்க்கலின் இந்திய பயணத்தின் போது 20 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வேளாண்மை, பொருளாதார விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்துவது தொடர்பாகவும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ஏஞ்சலா – மோடி சந்திப்பின் போது பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து, திறன் மேம்பாடு, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் ஏஞ்சலா மெர்க்கல் – மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.