தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 -க்கு விற்பனை..

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38408க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41448 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து 68.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.