தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.35,744-க்கு விற்பனை…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, ரூ.4,468-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,712-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,464-க்கு விற்பனை செய்யானது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. நேற்றைய மாலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.
22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.4,457-க்கு விற்பனை செய்யானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.