தங்கம்விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனை…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. காலையில் உயர்வதும், மாலையில் குறைவதும் தங்கத்தின் வாடிக்கையாகவே உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகமும் மிக அதிகம். இதனிடையே தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் நகை வாங்க பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை பிரியர்களை வருத்தமடைய செய்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,541க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.